பத்து லட்சம் உயிரினங்கள் அழியும் அபாயம்! ஐநா எச்சரிக்கை!
ஐ நா சபையின் ஒருங்கிணைப்பின் மூலம் , பல்லுயிர் ஆய்வறிக்கை ஒன்று பாரீசில் வெளியானது இந்த ஆய்வறிக்கையை 132 நாடுகள் அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. அந்த அறிக்கையின் படி, உலக உயிரினங்களில், 10 லட்சத்திற்கும் அதிகமானவை அழியும் அபாயத்தில் இருப்பதாகவும். இவை பல நாட்டு அரசுகள், சூழலியல் அமைப்புகள் நடத்திய, 15 ஆயிரம் ஆய்வுகளின் முடிவுகளை தொகுத்து இந்த எச்சரிக்கை வெளியானது.
காடுகளை அழித்து கட்டடங்கள் கட்டுவது, பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் அதிகமாக பயன்படுத்துவது, கடல் போக்குவரத்து மற்றும் மீன் பிடிதொழில் அதிகரிப்பது, புவி வெப்பமாதல் போன்ற பல காரணங்களால் இந்த எச்சரிக்கை வந்துள்ளது எனவும், சூழியல் பாதுகாப்பு, காட்டுயிர், கடலுயிர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால், இந்த எச்சரிக்கை உண்மையாவது வெகுதூரத்தில் இல்லை.
DINASUVADU