கல்வி உதவித்தொகை 10 நாட்களில் கிடைக்கும்:ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் ராஜலட்சுமி

சென்னை: “சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கான, கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களில், கல்லுாரிக்கு கிடைத்து விடும்,” என, ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., – அரசு: ஜாதி வேறுபாடுகளை களைவதற்காக, தி.மு.க., ஆட்சியில், சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தை, இந்த அரசு ஏன் கைவிட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். தீ விபத்தில் காயமடைந்தோருக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும், பல் மருத்துவர்களுக்கு, பொது மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். உயர் கல்வி படிக்கும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது; அவற்றை வழங்க வேண்டும்.அமைச்சர் ராஜலட்சுமி: அரசு கல்லுாரிகள் மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளுக்கு, முழுமையாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சுயநிதிக் கல்லுாரிகளில், 44 சதவீதம் வழங்கப்பட்டிருந்தது. இம்மாதம், 13ம் தேதி, 56 சதவீதத் தொகையான, 250.70 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும், 10 நாட்களில், கல்லுாரிகளுக்கு கிடைத்துவிடும்.அரசு: விடுதிகளில், காப்பாளர், சமையலர், இரவு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றை நிரப்ப வேண்டும். பல விடுதிகளில் கழிப்பறை வசதி இல்லை; சுற்றுச்சுவர் இல்லை. அமைச்சர் ராஜலட்சுமி: விடுதிகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றன. சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்