ரூபன் பிரதர்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு 101 மில்லியன் நன்கொடை.!
இந்தியாவில் பிறந்த ரூபன் சகோதரர்கள் 101 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய கல்லூரியில் பட்டதாரி மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டத்தை பிரிட்டனில் பணக்கார வணிகர்களில் ஒருவரான இந்தியாவில் பிறந்த ரூபன் சகோதரர்கள் 101 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று தெரிவித்துள்ளது.
ரூபன் அறக்கட்டளை நன்கொடை பின்தங்கிய இளங்கலை மாணவர்களுக்காக ரூபன் உதவித்தொகை திட்டம் கடந்த 2012 -ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
ரூபன் அறக்கட்டளையின் அறங்காவலர் லிசா ரூபன் கூறுகையில், ரூபன் அறக்கட்டளை பல ஆண்டுகளாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பின்தங்கிய மாணவர்களை ஆதரித்து வருகிறது. இதன் மூலம் பல்கலைக்கழகத்துடனான எங்கள் உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்தார்.
சமீபத்தில் ‘தி சண்டே டைம்ஸ்’ வருடாந்திர பணக்கார பட்டியலில் 16 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களைக் கொண்ட டேவிட் மற்றும் சைமன் ரூபன் இங்கிலாந்தின் இரண்டாவது பணக்கார பட்டியலில் உள்ளனர்.