100 – வது நாள் பீஸ்ட் படப்பிடிப்பு : படக்குழுவினர் கொண்டாட்டம்
பீஸ்ட் படப்பிடிப்பின் நூறாவது நாளான இன்றைய தினத்தை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியாகிய மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலிப்குமர் அவர்களின் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பீஸ்ட் படப்பிடிப்பிற்காக 120 நாட்கள் ஒதுக்கி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கி 100-வது நாள் ஆகியுள்ளது. இதனை படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram