துருக்கியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் – குறுக்கே சென்ற பூனை!
துருக்கியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குறுக்கே பூந்த பூனை.
துருக்கி இஸ்தான்புல்லில் வருடந்தோறும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்த வருடம் துருக்கியில் நடந்த பால்கன் யு 20 எனும் சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓட்டப்பந்தய வீரர்கள் தடகள பாதையில் வேகமாக ஓடிக் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பாதையில் பூனை ஒன்று போடப்பட்டு இருந்த கோட்டை தாண்டி ஓடி உள்ளது. இதனால் தடகள வீரர்கள் ஒரு நிமிடம் தடுமாறி உள்ளனர், சாதாரணமாக ஓடாமல் வீரர்களை ஏமாற்றுவது போல பாசாங்கு காட்டி ஓடியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உமுத் உய்சால் எனும் வீரர் முதலிடம் பெற்றுள்ளார்.