100கிமீ வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் உருண்டு கோர விபத்து.! 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலி.!
- பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவிற்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர்.
- ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி சாலையில் உருண்டுள்ளது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி ,42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவிற்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்தப் பேருந்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர்.
அதைதொடர்ந்து அரேகிப்பா நகரில் உள்ள ஒரு சாலையில் அந்தப் பேருந்து 100 கி.மீ. வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, தீடீரென ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறிய பேருந்து அடுத்த நிமிடத்தில் சாலையில் கவிழ்ந்து உருண்டுள்ளது. இதனால் அப்பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர விபத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு விசாரித்து வருகின்றனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.