ரஷ்யாவில் ஒரே நாளில் 10,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ரஷ்யாவில் ஒரே நாளில் 10,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில், இதுவரை 4,429,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ள நிலையில், இதுவரை இந்த வைரசை அழிப்பதற்கான எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இன்று ஒரே நாளில் மேலும் 10,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 11வது நாளாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,42,271 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை கொரோனா தொற்றுக்கு அங்கு, 2,212 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்றில் இருந்து 48,003 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025