இந்தோனேசியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, தற்பொழுது தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு, வீடு திரும்பினார்.
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வரும் நிலையில், அந்நாட்டில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 1613 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா, சுராபயா நகரை சேர்ந்த 100 வயதான கம்திம் என்பவருக்கு கடந்த மாதம் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர்.
இந்நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் கொரோனாவை தன்னம்பிக்கையுடன் எதிர்த்து போராடி, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ், முதியவர்களை குறிவைத்து தாக்கும் நிலையில், அந்த மூதாட்டி, பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், கொரோனா பாதித்த பின்பும் அவர் மன உறுதியுடன் காணப்பட்டதாகவும், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, மருந்துகளை சரிவர எடுத்து கொண்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனையறிந்த கிழக்கு ஜாவா ஆளுநர், மூதாட்டிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…