டார்க் வெப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விபரங்கள் மற்றும் சில முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டார்க் வெப் தளத்தில் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விபரங்கள் மற்றும் சில முக்கியமான தகவல்கள் டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜஹாரியா தெரிவித்தார். இதில் பயனர்களின் பெயர், போன் நம்பர், ஜி-மெயில் ஐடி, டெபிட், கிரெடிட் கார்டுகளில் உள்ள எண்கள் ஆகியவை கசிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விபரங்கள் அமேசான், மேக் மை ட்ரிப், ஸ்விகி உள்ளிட்ட மொபைல் கட்டணம் செலுத்தும் நிறுவனமான ஐஸ்பே (Juspay) மூலம் கசிந்துள்ளதாக கூறினார். இதற்கு முன், பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது பயனர் விவரங்களை வெளியிட்டது, குறிப்பிடத்தக்கது.
மார்ச் 2017 முதல் ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பணபரிமாற்றங்களின் போதும், பில்கள் செலுத்தும்போதும் இந்த விபரங்களை எடுத்துள்ளதாகவும், இதில் பல்வேறு இந்தியர்களின் கார்டு எக்ஸ்பைரி தேதி, கஸ்டமர் ஐடி மற்றும் கார்டு எண்கள் உள்ளிட்ட தகவல்களை டார்க் வெப்பில் விற்பனை செய்து வருவதாகவும், அதனை டெலிகிராம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, பிட்காயின் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…