மூன்று மாதங்கள் கழித்து முதல் கொரோனா தொற்று உருதி கொரோனா வைரஸுக்கு அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறது வியட்நாம்.
ஆசியாவின் Vietnam பகுதியில் தற்போது கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது மேலும் கொரோனா தொற்று சோதனைத் திட்டத்தை மேற்கொண்டது. அங்கு மொத்த கொரோனா எண்ணிக்கையை வெறும் 417 ஆக உள்ளது ஆனால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை.
சுற்றுலா ஹாட் ஸ்பாட் டானாங்கைச் சேர்ந்த 57 வயதான ஒருவருக்கு கொரோனா உறுதியானது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 100 நாட்களுக்கு மேலாக ஒரு கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றி தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அந்த நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கடந்த சனிக்கிழமை மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. மேலும் அவருக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவர்கள் ஹோ சி மின் நகரத்திலிருந்து டானாகிற்கு வந்தனர் .நோயாளி தொடர்பில் இருந்த 50 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோயாளியுடன் 103 பேர்கொரோனாவுக்கு பரிசோதிக்கப்பட்டனர், ஆனால் யாருக்கும் கொரோனா இல்லை என்று முடிவுகளில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனைகளில் 147 பேர் உட்பட நாடு முழுவதும் 11,800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்று அங்கு அரசாங்கம் கூறவில்லை. ஆனால் அவர் கிட்டத்தட்ட ஒரு மாதமாக டானாங்கை விட்டு வெளியேறவில்லை என்று கூறினார். ஆரம்பத்தில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது அந்த நிலையில சனிக்கிழமையன்று கொரோனா சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் ஹனோய் அதிகாரிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தது. சர்வதேச வர்த்தக விமானங்களுக்கு வியட்நாமின் தடை இன்னும் நடைமுறையில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பதிவான கிட்டத்தட்ட 150 கொரோனா தொற்றுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடையே காணப்பட்டள்ளது.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…