கனடாவில் ஒரேநாளில் 10 பேர் கத்தியால் குத்தி கொலை..15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கனடாவில் ஒரேநாளில் 10 கத்தியால் குத்தி கொல்லப்பட்டதால் அதிர்ச்சி.
கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்தில் நேற்று ஒரேநாளில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர், இந்த கண்முடித்தனமான தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்பின், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் இதுதொடர்பான சில நபர்களை போலீஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு சந்தேக நபர்களை டேமியன் சாண்டர்சன்(வயது 31) மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் (30) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 13 குற்றக் காட்சிகளில் நடந்த கத்திக் குத்துகள், நவீன கனேடிய வரலாற்றில் நடந்த மிகக் கொடிய படுகொலைகளில் ஒன்றாகும். மேலும் அவை நாடு முழுவதும் எதிரொலிப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.