குண்டு வெடிப்பில் இறந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக 10 லட்சம்
இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி, நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் சக்தி வாய்ந்த தொடர் குண்டுகள் வெடித்தனர்.இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 பேருக்கு மேல் உயிர் இழந்தனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சமும் ,காயமடைந்தவர்களுக்கு காயத்தை பொறுத்து தலா ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.