10 லட்சம் உக்ரேனியர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர் – ஐ.நா
உக்ரைனில் இருந்து 10 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாக ஐ.நா தகவல்
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் பலர் மற்ற நாடுகளுக்கு வருகின்றனர். இதுகுறித்து ஐ.நா கூறுகையில், உக்ரைனில் இருந்து 10 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இந்த தாக்குதலால் 1.20 கோடி மக்கள் இடம் பெயரை நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.