10 பேர் பலி: 20 ஆம்புலன்ஸ், 800 அதிகாரிகள், 750 மருத்துவ ஊழியர்கள் என சிக்கி தவிக்கும் மக்களை மீட்க போராட்டம்.!
கிழக்கு சீனாவில் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவராகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பலர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்த ஹோட்டல் திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அவரசநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 மாடி கொண்ட சின்ஜியா ஹோட்டலில் சில புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஹோட்டலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 58 பேர் தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடிப்பாடில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் கடுமையாக போராடி வருகின்றனர். இடிப்பாடில் இருந்து 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் 37 பேர் உயிருடன் சிக்கி கொண்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 20 அம்புலன்ஸ்கள், 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 750 மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சரிவுக்கு காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,695 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,097ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,000 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.