10 வது – உலக கட்டழகராக இலங்கையின் லூசியன் புஷ்பராஜ் தேர்வு…!!

Default Image

தாய்லாந்தின் பாங்காக் நகரில் உலக கட்டழகர் மற்றும் உடலமைப்பு 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை தமிழரான லூசியன் புஷ்பராஜ் 10 ஆவது உலக கட்டழகராக வெற்றி பெற்றிருக்கிறார்.
100 கிலோவுக்கு அதிகமான எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் இவர் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார். ஆசியாவின் கருப்பு சிங்கம் என்று அழைக்கப்படும் லூசியன் இலங்கையில் பிறந்தவர்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் பங்கெடுத்து வருகிறார். குவைட் நாட்டில் உள்ள உடற்பயிற்சியகத்தில் பயிற்சியாளராகக் பணியாற்றிய லூசியன் 2013ஆம் ஆண்டு கோல்டன் ஸ்ரீலங்கா உடற்கட்டழகராகவும், அதே ஆண்டு 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் இலங்கையின் உடற்கட்டழகராகவும் தேர்வானார்.
2017 வருடம் அமெரிக்காவின் டெக்சாஸில் இடம்பெற்ற போட்டியில் 4 ஆவது இடத்தையும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் 2 ஆவது இடத்தையும், தற்போது உலக சாம்பியனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்