10-ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத மாணவர்களை தொழிற்கல்வி பயிற்சியில் சேர்க்க வேண்டும் -நிலோபர் கபில்….!!
பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத மாணவர்களை தொழிற்கல்வி பயிற்சியில் சேர்க்கவேண்டும் என பெற்றோர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அறிவுரை வழங்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோனாமேடு அரசு துவக்கப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான துவக்க விழாவில் அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,மாணவர்களை தொழிற்சாலைகளுக்கு அனுப்பாமல், படிக்க வைக்கவேண்டும் என கூறினார். பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத மாணவர்களை அரசு தொழிற்கல்வியில் சேர்க்க பெற்றோர்களுக்கு அமைச்சர் நிலோபர் கபில் அறிவுரை வழங்கினார்.