வெனிசுலா நாட்டிற்கு சென்றடைந்த 1 லட்சம் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிகள்…!
ரஷ்யா நாட்டில் இருந்து 1 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் வெனிசுலா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகிற நிலையில், ரஷ்யா நாட்டில் இருந்து 1 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் வெனிசுலா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் அங்குள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மாதுரோ அவர்கள் கூறுகையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். அதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.