+1 தேர்வு முடிவுகள் வெளியீடு..! தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள் விவரம் இதோ..!

School students

+1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள் விவரம்.

தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 11ஆம் வகுப்பு தேர்வினை 7,76,844 பேர் எழுதிய நிலையில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில், மாணவியர் 94.36 சதவீதமும் மாணவர்கள் 86.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.inwww.dge.tn.gov.in  ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். இதுதவிர, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருப்பூர் – 96.38% பெற்று முதலிடத்திலும், ஈரோடு – 96.18% பெற்று இரண்டாவது இடத்திலும், கோவை – 95.73% பெற்று மூன்றாவது இடத்திலும், நாமக்கல் – 95.60% பெற்று நான்காவது இடத்திலும், தூத்துக்குடி – 95.43% பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்