ஒரு நாளுக்கு வழக்கறிஞருக்கு 1கோடி சம்பளமா.? சுஷாந்த் தற்கொலை வழக்கு குறித்து ரியா சக்கரபர்த்தி.!

Default Image

சுஷாந்த் தற்கொலை வழக்கு ரியா சக்கரபர்த்தி கூறுகையில், இந்த வழக்கை மும்பைக்கு மாற்றும்படியும், தனக்கு நீதி மீது நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தை குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் சுஷாந்த் சிங்கின் தந்தை, மகனை மரணத்திற்கு தூண்டியது சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபர்த்தி என்றும், அவர் தான் சுஷாந்தின் மன உளைச்சலுக்கு காரணம் என்றும், சுஷாந்த் வங்கி கணக்கிலிருந்து 15கோடி வரை எடுத்துள்ளதாகவும் கூறி பீகாரில் உள்ள பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து கூறிய ரியா, தனக்கு கடவுள் மற்றும் நீதி மீது நம்பிக்கை உள்ளதாகவும், தனக்கு நீதி கிடைக்கும் என்றும், கடந்த ஜூன் 8 வரை தான் சுஷாந்துடன் லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருந்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். அதனுடன் பீகார் மாநிலத்தில் தனக்கு எதிராக தொடரும் வழக்கை மும்பைக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரியாவை நம்ப தயாராகாமல் அவர் நாடகமாடுவதாகவும், சுஷாந்தின் மரணத்திற்கு இவர் தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர். மேலும் ரியா அவரது இந்த வழக்கை வாதாட வழக்கறிஞருக்கு தினமும் 1கோடி வரை சம்பளம் கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரியா மீது ரசிகர்களிடையில் உள்ள சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்