போதிய உணவின்றி ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகள் தவிப்பு…!
ஆப்கானிஸ்தானில் போதிய உணவின்றி 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் போதிய அளவு உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்த அந்நாட்டின் யுனிசெப் அமைப்பின் தலைமை தொடர்பு அதிகாரி கூறுகையில், ஐந்து வயதுக்கும் கீழ் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் அத்தியாவசிய வசதிகள் மற்றும் போதிய அளவு உணவு கிடைக்காத சூழலில் ஊட்டச்சத்து இன்றி மருத்துவமனைகளில் இருப்பதாகவும், அவர்களுக்கு மனித நேய உதவி அளிக்க வேண்டிய அவசர தேவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.