1 கோடி 10 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு மொத்தம் எவ்வளவு தெரியுமா?
உலக அளவில் கொரானாவின் தாக்கம் இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்தைத் தாண்டி இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அச்சுறுத்தும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே அமைதி காக்கும் கொரோனா, பல இடங்களில் தனது வீரியத்தை காட்டிக் கொண்டே தான் உள்ளது. இதுவரை உலக அளவில் 11,193,565 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 529,127 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,331,335 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர்த்து தற்போது மருத்துவமனையில் 4,361,644 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 209,028 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரே நாளில் 5,170 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் தனித்து இருப்போம், விழித்திருப்போம்.