1.71 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு தற்போது வரை 1.71 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அரசாங்கமும் மக்களும் இந்த வைரஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பல மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 17,187,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள 1.71 கோடி பேரில், 670,202 பேர் உயிரிழந்துள்ளனர், 10,697,976 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 290,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரேநளில் 7,031 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 5,818,102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இருப்போம், தனித்து இருப்போம் விழித்திருப்போம்.