1.25 மில்லியன் யூரோ ஏலம் போன பந்தய புறா
- புறாகளை ஏலத்தில் விடும் “பிபா” எனப்படும் இணையதள நிறுவனம் அர்மாண்டோவை ஏலத்தில் விட்டது.
- ஏலத்தில் விட்ட அர்மாண்டோ புறா சுமார் ரூ.9 கோடியோ 75 லட்சத்து 13 ஆயிரம் (1.25 மில்லியன் யூரோவுக்கு) ஏலம் போனது.
இங்கிலாந்தை சேர்ந்த கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன்.அர்மாண்டோ என்ற பந்தய புறாவை வளர்த்து வந்தார். அர்மாண்டோ புறா 2018ம் ஆண்டு நடந்த ஏஸ் புறா சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2019ம் ஆண்டு நடந்த புறாக்களுக்கான ஒலிம்பிக், அங்குலம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
லூயிஸ் ஹாமில்டன் ஐந்து முறை “பார்முலா ஒன்” பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர்.
சமீபத்தில் புறாகளை ஏலத்தில் விடும் “பிபா” எனப்படும் இணையதள நிறுவனம் அர்மாண்டோவை ஏலத்தில் விட்டது. ஏலத்தில் விட்ட அர்மாண்டோ புறா சுமார் ரூ.9 கோடியோ 75 லட்சத்து 13 ஆயிரம் (1.25 மில்லியன் யூரோவுக்கு) ஏலம் போனது.
சீனாவை சேர்ந்த இருவர் இந்த அர்மாண்டோ பந்தய புறாவை ஏலத்தில் எடுத்தனர்.மேலும் இதற்கு முன்னர் ஏலம் விடப்பட்ட புறாக்களில் அதிக விலைக்கு விற்பனையான புறா 3.76 லட்சம் யூரோக்களுக்கு தான் விற்பனையாகியது.