PS4-ல் பக்ஆ? எங்க கண்டுபிடிங்க பாப்போம்.. கண்டுபிடிச்சா 38 லட்சம் பரிசு!!
பி.எஸ் 4-ல் ஏதேனும் பக் இருந்தால், அதனை கண்டுபிடிக்கும் ஹக்கர்களுக்கு தலா 50,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.37,81,400) ருபாய் பரிசாக வழங்கப்படும் என பிலே ஸ்டேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் என வீடியோ கேம்ஸ் விளையாடாத யாரும் இல்லை. இதனை நவீன மயமாக்குவதற்காக, சோனி நிறுவனம் பிலே ஸ்டேஷனை 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது சந்தையில் அறிமுகமான சிறிது நாட்களிலே, நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதற்க்கு ஏற்றமாதிரி பல கேமிங் நிறுவனங்கள், சந்தையில் பல கேம்ஸ்களை அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து பி.எஸ் 2, 3, 4, ஐ தொடர்ந்து, தற்பொழுது பிலே ஸ்டேஷனின் ஐந்தாம் தலைமுறை, இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளது. அதனின் டிசைனை பிலே ஸ்டேஷன் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டது. இதனை பார்த்த பிலே ஸ்டேஷன் ரசிகர்கள், பி.எஸ் 5 வெளியீட்டுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பி.எஸ் 4-ல் ஏதேனும் பக் (சிக்கலான பிழைகள்) இருந்தால், அதனை கண்டுபிடிக்கும் ஹக்கர்களுக்கு தலா 50,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.37,81,400) ருபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இதனை கண்டுபிடிக்கும் பயனர்களுக்கு தலா 3,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,26,884) வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.