ஹாலிவுட் பிரபலத்தின் பாலியல் முறைகேட்டை அம்பலப்படுத்தியதற்காக புலிட்சர் விருதுகள்!

Default Image

தி நியூயார்க் டைம்ஸ் (New York Times) மற்றும் நியூ யார்க்கர் (New Yorker) பத்திரிகைகளுக்கு  ஹாலிவுட் பிரபலத்தின் பாலியல் முறைகேட்டை அம்பலப்படுத்தியதற்காக, புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டெய்ன் (Harvey Weinstein) என்பவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களைக் கூறியிருந்தனர். இந்த செய்தியின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக பொதுச்சேவைப் பிரிவுக்கான புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மற்றொரு பாலியல் முறைகேட்டை அம்பலப்படுத்தியதற்காக தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு புலனாய்வுப் பிரிவுக்கான புலிட்சர் விருதும், 2016 அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த செய்திகளை வெளியிட்டதற்காக நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளுக்கு தேசிய செய்திகள் பிரிவுக்கான புலிட்சர் விருதும் வழங்கப்பட்டுள்ளன.

ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரம் உட்பட பல்வேறு சர்வதேச நிகழ்வுகளை வெளியிட்டதற்காக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கும் 2 புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்