ஸ்பெயின் அணி உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் வெற்றி!
ஸ்பெயின் மற்றும் உருகுவே அணிகள் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. கசான் ((Kazan)) நகரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை, ஈரான் அணி எதிர்கொண்டது.
முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக இருந்த போதிலும், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். 54வது நிமிடத்தில் அந்த அணியின் டியாகோ கோஸ்டா ((diego costa)) கோல் அடித்தார்.
கடைசிவரை போராடியும் ஈரான் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடியில ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றிப்பெற்றது.
முன்னதாக, சவுதி அரேபியா – உருகுவே ((uruguay)) அணிகள் மோதிய ஆட்டம் ரோஸ்டவ் ஆன் டான் (( Rostov on Don )) நகரில் நடைபெற்றது. 23வது நிமிடத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் ((luis suarez)) கோல் அடித்து அசத்தினார். ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கடுமையாகப் போராடியும் கோல் ஏதுவும் போடாததால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றிபெற்றது.
மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில், மொராக்கோ அணியை போர்ச்சுக்கல் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே கோல் அடித்து ரசிர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.