தாய் மற்றும் மனைவியை கழுத்து அறுத்து கொன்ற முன்னாள் தடகள வீரர்.!

தாய் மற்றும் மனைவியை கழுத்து அறுத்து கொன்ற முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் அமெரிக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரரான இக்பால் சிங் கடந்த 1983ல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் குண்டு எறிதலுக்கான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் ஆவர் . அதனையடுத்து அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் மனைவி மற்றும் தாயுடன் வசித்து வந்தார்.
62 வயதான இவர் அமெரிக்காவில் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இக்பால் சிங் தனது மனைவி மற்றும் தாயின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். அதனையடுத்து தன்னையும் கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இக்பால் சிங்கை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025