வைகை அணையில் திடீர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு..!
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த திடீர் மழையால் நீர்வரத்து அதிகரித்ததால், வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த வாரங்களில் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வந்தது. இதனால் கோடையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என மக்கள் அஞ்சிய நிலையில், வைகை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.