வேலூர் அருகே அமோகமாக நடைபெறும் கள்ளச்சாராய விற்பனை!
சமூக ஆர்வலர்கள் ,வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமோகமாக நடக்கும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள காளியம்மன்பட்டி, செங்குன்றம், சூறாளூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளசாராய விற்பனை படு ஜோராக நடைபெறுகிறது.
சாராயம் தயாரிப்பதையே குலத்தொழிலாகக் கொண்ட சிலர் கூலித் தொழிலாளர்களை மையமாக வைத்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
இப்பகுதியில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயம், லாரி ட்யூப்களிலும், பாலித்தின் கவர்களிலும் அடைக்கப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. காளியம்மன்பட்டியில் குடியிருப்புப் பகுதிகளிலேயே விற்பனை நடைபெறுவதாகவும், காவல்துறைக்கு புகாரளித்தால் புகாரளிப்பவர்களை அடையாளம் கண்டு, சாராய வியாபாரிகள் தாக்குவதாகவும் கூறப்படுகிறது. கள்ளச்சாராய விற்பனையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராய கும்பலை கைது செய்யவேண்டுமென்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.