வெளிநாடு செல்லும் முன்பு அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சி…! விஜய் மல்லையா பரபரப்பு தகவல்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 13 வங்கியில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார்.
பின்னர் இந்திய 18 வங்கிகளின் மனுவால் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது வரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க இந்திய அரசும் முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் விஜய் மல்லையா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.