வெறும் 61 காசுகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் விற்பனை …!ஏக்கத்தில் இந்திய மக்கள் …!
இந்தியாவை விட வெனிசுலா நாட்டில் மிகவும் குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.
மேலும் ஆந்திரா,ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் ,டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் மற்ற மாநிலங்கள் இன்னும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றது.
ஆனால் உலக நாடுகளை பொறுத்த வரையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வெனிசுலா நாட்டில் ரூ.0.61 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது.இதற்கு அடுத்தபடியாக ஈரான் நாட்டில் ரூ.20.47 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.நமக்கு அண்டை நாடான பாகிஸ்தானில் ரூ.54.11 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இவை இந்திய ரூபாயின் மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலவரமானது செப்டம்பர் 10 ஆம் தேதி ஆகும்.
ஆனால் இந்தியாவில் தான் பெட்ரோல் விலை திடீரென்று உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.
இந்நிலையில் மும்பையில் செப்டம்பர் 10 ஆம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை ரூ. 88.12 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 88.26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.