வெறுக்கப்பட்ட ‘திதி’யின் ‘விதி’யை மாற்றிய கிருஷ்ணன்…!!அறிவீர்களா நீங்கள்..?
நம் தெய்வத்தை வணங்கவோ,அல்லது நல்ல செயல்களை செய்யும் முன்பு நல்ல நேரம் எல்லோரும் பார்ப்பதுண்டு எதற்காக என்றால் செய்யும் செயல் எந்த இடையுறுமின்றி நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகதான்.
ஆனால் நாம் இந்த 2 திதிகளில் எந்த ஒரு புது வேலையுமே தொடங்க மாட்டோம்.ஆனால் இந்த 2 திதிகளில் தான் விஷ்ணு தனது அவதாரத்தை நிகழ்த்தினார் என்றால் நம்புவீர்களா..!ஆம் அந்த திதிக்கும் மறுவாழ்வு அளித்த அந்தமாதவனின் உள்ளத்தை என்னவென்று உரைப்பது.
திதிகள் பல உள்ளன அதில் அஸ்டமிதிதி,நவமி திதி இந்த 2 திதிகள் உள்ள நாட்களில் எந்த சுபகாரியங்களும் செய்யமாட்டார்.அனைவராலும் ஒதுக்கப்பட்ட திதிகள் என்றே சொல்லலாம்.
இனி “திதி”யின் “விதி”மாறியதை பார்ப்போம்..!!
மனமுடைந்த திதிகள் 2டும் பகவான் விஷ்ணுவை தஞ்சமடைந்து தங்களின் குறைகளை சொல்லியது,”பிரபு எல்லோரும் எங்களை ஒதுக்குகிறார்கள் நாங்கள் என்ன பாவம் செய்தோம்.மேலும் சுபகாரியங்கள் செய்யவும் அஞ்சுகிறார்கள் எங்களின் விதியை நினைத்து பெரும் துன்பப்படுகிறோம் என முறையிட்டது திதிகள்.
உடனே பகவான் விஷ்ணு பரமாத்மா திதிகளே நான் உங்களின் விதியை மாற்றியமைக்கிறேன். இனி எல்லோரும் உங்கள் திதி வரும் நாட்களில் உங்களை அனைவரும் வணங்குவார்கள் ஆம் நான் உங்களின் திதியில் அவதரிக்க போகிறேன்.
நவமி திதியில் ராமனாகவும்,அஸ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் பூவுலகில் அவதரிப்பேன்.என்னோடு உங்களையும் அனைவரும் வணங்குவார்கள் என்று கூறி வரமளித்தார் விஷ்ணு பகவான்.அதனாலே ராம அவதாரத்தை நவமியில் நிகழ்த்தினார்.ஒவ்வொரு ராம பிறப்பையும் ராமநவமி என்று கொண்டாடிகிறோம்.
அஸ்டமியின் விதியை மாற்றி கிருஷ்ண அவதாரம் நடந்தது.அனைவராலும் நிந்திக்கப்பட்ட திதிகளின் விதியை மாற்றிய அந்த பரமாத்மா இந்த ஆன்மாவின் மீது அக்கரை செலுத்தாமல இருக்கும். கருநீல கண்ணனை நாம் நிபந்தனையின்றி வணங்க வேண்டும்.நிச்சயமாக நமது விதியையும் மாற்றும் வல்லமை அந்த வள்ளலுக்கு உண்டு..!அவரின் அருளாலே அவரை வணங்குவோம்.இன்று கிருஷ்ணனை வழிபட்டு எண்ணியதை வெண்ணெய் பிரியரிமிருந்து பெற்றுக்கொள்வோம்.
DINASUVADU