வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்தார்..!!அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
சமீபத்தில் வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் தில்லு முல்லு நடைபெற்றதாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், ‘வெனிசுலா அதிபர் தேர்தல் போலியான ஒன்று.
சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.முறைகேடான இந்த தேர்தலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்கை குலைப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் தடை விதித்து வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார். மேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்