வெந்தயத்தின் நன்மைகள்
வெந்தயம் என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று . இது நாம் வசிக்கும் இடங்களில் மிக எளிய முறையிலும் , மிக குறைந்த விலையிலும் கிடைக்கும் பொருள் . நம் உடலில் பல விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ குணங்கள் வெந்தயத்தில் உள்ளது. இது நம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டது . மிக எளிதாக கிடைக்கும் எந்த நன்மைகளையும் நாம் கண்டுகொள்வதில்லை .
வெந்தயத்தில் நீர்சத்து , புரதசத்து , கொழுப்புசத்து மாவுசத்து என அதிகமான சத்துக்களை கொண்டது வெந்தயம். வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும் , கருமை நிறத்தையும் தருகிறது . எனவே இது கூந்தல் தைலங்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது .
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். துவர்ப்பு தன்மை கொண்டது .வறட்சி அகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியை அதிகரிக்கும் தன்மை கொண்டது .நரம்புகளை பலப்படுத்தும் . இதயத்தை பாதுகாக்க கூடிய சத்துக்களான மினரல் பொட்டாசியம் போன்ற சத்துக்களையும் இந்த சின்ன விதை கொடுள்ளது.
அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாது . உடல்பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி கொண்டது.அந்த வெந்தயத்தை நீரில் ஊற வைத்து குடிப்பது , அதனை பொடியாக்கி குடிப்பது, உணவில் சேர்த்து கொள்வது என பல வழிகளில் இதனை பயன்படுத்திருப்பீர்கள் . வெந்தய தேநீரை குடித்திருக்கிறீர்களா ? அதனை குடிப்பதினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்க அறிந்திருக்கிறீர்களா ? இதோ அதன் செய்முறையும் , நமைகளும்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி , அதில் சிறிதளவு வெந்தயத்தை போட்டு , அதனை மூடிமூன்று நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதனை இற க்கிய பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆன பின்பு, அதனை வடிகட்டி , அதில் சிறிதளவு தேனை கலந்து பருக வேண்டும் .
வெந்தய டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
குடலை சுத்தமாக்க :
குடல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும், உணவுகுழாய்களில் தாங்கும் கழிவுகளை அகற்ற பயன்படும்.நச்சு கழிவுகள் உடலில் தங்குவதை தடுக்கிறது.
இரத்த சோகையை தடுக்க :
தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினரும், வைத்து முதிர்ந்தவர்களுக்கு மன அழுத்தம் காணரமாக இரத்த சோகைக்கு ஆளாகின்றனர் . இப்படிபட்டவர்களுக்கு வெந்தய டி ஒரு நல்ல அருமருந்தாகிறது.
தாய்ப்பால் அதிகரிக்க :
பல திறமையுள்ள ஆராய்ச்சியாளர்களால் நிருபிக்கப்பட்ட உண்மை இது, தாய்ப்பால் சுரக்காத பெண்கள் தினமும் வெந்தய டீ அருந்தி வந்தால் தாய்பால் அதிகமா சுரக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது .
கொழுப்பு கரைய :
கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் வெந்தய டீ பருகி வந்தால் , இதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் . இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும்.
உடல் எடையை குறைக்க :
வெந்தய டீ உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கிறது அதுமட்டும்மல்லாமல் அடிக்கடி பசி இடப்படுவைத்தையும் தடுக்கிறது . உடலில் தேங்கி உள்ள கொழுப்புக்களை கரைக்கவும் பயன்படுகிறது . உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது .
சக்கரை வியாதி :
வெந்தய டீயை பருகி வந்தால் , இந்த காலத்தில் பெரும்பாலானோரை தாக்கும் டைப் -2 சக்கரை வியாதியை தடுக்கலாம் . இத விதமான சக்கரை வியாதி வந்தவர்கள் தினமும் வெந்தய டீயை பருகி வந்தால் மாத்திரை போடா வேண்டிய அவசியம் இருக்காது . இது சக்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும் .
பித்த நோய்கள் :
அதிகமானோர் உடல் சூட்டினால் அசிட்டிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் . இந்த தேநீர் உடலில் குளிர்ச்சியை உண்டாக்குவதில் பித்தம் சம்பந்தமான ஒயர்கள் வராமல் தடுக்கிறது.