வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!! தலா ரூ.20 லட்சம் வழங்க முடிவு…!!!
விளையாட்டு போட்டியில் பங்கேற்று பதக்கம் பெரும் வீரர்களுக்கு தமிழக அரசு ஊக்க தொகை வழங்குகிறது. அதாவது, வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளி பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.30 லட்சமும், தங்க பதக்கம் பெறுபவர்களுக்கு 50 லட்சமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய விளையாட்டு போட்டி, கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அன்றி இந்தனோசியாவின் ஜகார்தா மாற்று பாலெம்பெங் நகரங்களில் கோலாகலமாக தொடங்கியது.
இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட வீரர்கள் முதலில் அற்று சறுக்கல்கள் இருந்தாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 18-வைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மாராக குழு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்க தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.