வீட்டில் சிங்க குட்டி….ரூ 8,14,000 விற்பனை..போலீஸ் நடவடிக்கை…!!
பாரீஸ் நகரில் வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் ஒருவர் வீட்டில் சட்ட விரோதமாக சிங்கக்குட்டி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேரில் சென்றனர்.அப்போது பிறந்து 6 வாரங்களே ஆன அந்த பெண் சிங்கக் குட்டி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.அப்போது அவர் அந்த பெண் சிங்கக் குட்டி 11 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சிப்பதாகவும் தெரியவந்தது.
பின்னர் விசாரணை நடத்திய காவல்துறையினர் விசாரணை நடத்தி அந்த சிங்கக்குட்டி நல்ல ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்த போலீசார் அந்த சிங்கக்குட்டியை அவர்கள் கைப்பற்றி, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.அந்த சிங்கக்குட்டியை சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.பெண் சிங்கக் குட்டியை வைத்திருந்த அவர் மீது ஏற்கனவே அவர் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.வீட்டில் சட்ட விரோதமாக சிங்கக்குட்டியை வைத்திருந்து ஒருவர் பிடிபடுவது இது முதல் முறையல்ல.அந்த சிங்கக்குட்டி தென் ஆப்பிரிக்க காட்டில் இருந்து வந்தது தெரியவந்து, பின்னர் அங்கு கொண்டு போய் விடப்பட்டது.
DINASUVADU