விஷம் கலந்த தண்ணீரை பருகிய மாணவிகள்!100 மாணவிகள் மயக்கம்!60 மாணவிகளின் நிலை கவலைக்கிடம்!
ஆப்கானிஸ்தானில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஜெர்பியா பெண்கள் பள்ளியிலிருந்து அருகில் உள்ள கால்வாயிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படும்.இந்த குடிநீரை குடித்த 100 மாணவிகள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சுமார் 60 பேர் மோசமாக இருப்பதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர் குடிநீர் சோதிக்கப்பட்டபோது, கடுமையான விஷம் இருந்ததாக தெரியவந்தது.