விவசாயிகளுக்காக 4,000,00,00,000 செலவு செய்யும் மத்திய அரசு..!!
மத்திய மோடி அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து பயன் பெரும் வகையில் 22 விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை உயர்த்தப்படும் என்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழகியுள்ளது.
இதில் விவசாய விளைபொருள்களான நெல், கோதுமை, சிறு தானியங்கள் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு உயர்த்தப்பட்ட குறைந்த பட்ச ஆதாரவிலை அனைவருக்கும் கிடைக்கும். இந்த புதிய திட்டத்தினால் மத்திய அரசுக்கு, கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பெட்ரோல் தயாரிக்க பயன்படுத்தப்படும் எத்தனால் விலையை 25 சதவீதம் உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, எத்தனால் விலை, 47 ரூபாய் 50 காசில் இருந்து 52 ரூபாயாக உயரும்.
DINASUVADU