விலைவாசி உயர்வு, அதிக வருமான வரி, மக்கள் போராட்டம் எதிரொலி! பிரதமர் பதவி விலகல்..!
விலைவாசி உயர்வு, வருமான வரி மசோதாவிற்குப் எதிரான மக்கள் போராட்டத்தின் எதிரொலியாகப் பதவில் இருந்து விலகினார் ஜோர்டான் பிரதமர் ஹனி முல்கி!
தொடர்ச்சியாக வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடிவரும் நிலையில் பிரதமர் ஹனி அல் முல்கியை ராஜினாமா செய்யக்கோரி ஜோர்டன் மன்னர் அப்துல்லா உத்தரவிடவுள்ளதாக தகவல்.
ஜோர்டானில் அதிக வரி விரிப்பிற்கு எதிராக மக்கள் கடந்த மூடரு நாட்களாக போராட்டம் செரித்து வருகின்றனர். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வாறான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு ஏற்ப அளவீடு வரி செய்வதாகவும் இது வறிய மற்றும் மத்திய தர மக்களை பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த மக்கள் அரசுக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்
மேலும் ஜோர்டானின் தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தில் போலிசார் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி துன்புறுத்தியதாக புகாரும் எழுந்துள்ளது.
இதனால் பிரதமர் ஹனி அல் முல்கியை ராஜினாமா செய்யக்கோரி ஜோர்டன் மன்னர் அப்துல்லா உத்தரவிடவுள்ளதாக தகவல்.