விரைவில் நினைவிடம் ஆகிறது போயஸ் இல்லம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து, கடந்த 30 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில், அதிகாரிகள் நில அளவீட்டு பணிகளை தொடங்கினர். அடுத்தக் கட்டமாக, சமூக தாக்கம் குறித்து மூன்றாம் நபர் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தேவைப்பட்டால் மக்கள் கருத்தும் கேட்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அந்த இடத்திற்கு உரிமை கோருபவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது குறித்து நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், எவரும் இல்லையென்றால் நிலம் மற்றும் கட்டட மதிப்பிற்கான தொகை, நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் எனவும் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் 4 மாதத்திற்குள் முடிவடையும் எனவும், அதன் பின்னர் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
source: dinasuvadu.com