விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை… தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்…

மக்களின் வேலைப்பளுவை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க,சுமார் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை முதலமைச்சர் பழனிசாமி வரும் 21ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.