விராத் கோலி அவுட் என்று நடுவரிடம் சண்டையிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன்..!!
விராட் கோலிக்கு அவுட் கொடுக்காததால் நடுவர் குமார் தர்மசேனாவிடம் சண்டையிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 15 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது 29-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அந்த ஓவரில் ஒரு பந்து விராட் கோலியின் கால் பேடை தாக்கியது.
இதனால் ஓவர் முடிந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் நடுவர் குமார் தர்மசேனா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விராட் கோலியும் வாதத்தில் கலந்து கொண்டார்.
ஆட்டம் முடிந்த பின்னர் கள நடுவர்களான குமார் தர்மசேனா, ஜோல் வில்சன், 3-வது நடுவர் ப்ரூஸ் ஆக்சன்போர்டு ஆகியோர் புகார் அளித்தனர். அப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது மீதான தவறை ஒத்துக்கொண்டதால் விசாரணை ஏதுமின்றி போட்டியின் சம்பளத்தில் 15 சதவிதம் விதிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU