வியர்வை வெளியேறுவதனால் ஏற்படும் நன்மைகள்.
மனித உடம்பில் வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் அந்த வியர்வையானது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது வெயிலில் நடந்து செல்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் .
வியர்வை வெளியேறுவது என்பது உடலின் தீவிர செயல்பாட்டின் ஓர் அறிகுறி. இந்த வியர்வையின் மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதுமட்டுமின்றி வேறு சில நன்மைகளும் வியர்வை வெளியேறுவதன் மூலம் கிடைக்கிறது.
தினசரியா மனித உடம்பில் வியர்வை வெளியேற்றத்தின் போது, உடல் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகவும் மற்றும் சுறு சுறுபாகவும் இருக்கும்
உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும் போது மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும் இதனால் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்…