விம்பிள்டன் டென்னிஸ் போட்டி:நோவாக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார்!நான்காவது முறையாக கைப்பற்றி சாதனை!
சாம்பியன் ஆனார் நோவாக் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த ஒருமாதமாக லண்டனில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியின் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.இந்த போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சன் விளையாடினர்.
இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச் 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.இது இவருக்கு நான்காவது விம்பிள்டன் பட்டம் ஆகும்.மேலும்கிராண்ட்ஸ்லாம் தொடரில் மொத்தம் 14 கோப்பைகளை வென்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.