வித்தியாசமான ஆசிய விமான நிறுவனங்கள் !பயன்படுத்திய பழைய விமானங்களை வாங்க அதிக ஆர்வம் !
ஆசிய பிராந்தியத்தில் உள்ள விமான நிறுவனங்களிடையே , பயன்படுத்திய பழைய விமானங்களை வாங்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் ஆசிய நிறுவனங்கள் 61 பழைய விமானங்களை வாங்கிய நிலையில், 54 புதிய விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன.
குறைவான விலை முக்கிய காரணமாக இருந்தாலும், விரைவாக டெலிவரி கிடைப்பதும் பழைய விமானங்களை நாடுவதற்கான மற்றொரு காரணமாகும். புதிய விமானங்களை வாங்க சுமார் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் நிலையில், பழைய விமானங்களுக்கு சுமார் 250 கோடி ரூபாய் செலவிட்டாலே போதுமானதாக உள்ளது. பெரும்பாலும் சீன நிறுவனங்களே வெளிநாட்டு விமான சேவை விரிவாக்கத்திற்காக பழைய விமானங்களை நாடுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.