விங் கமாண்டர் அபிநந்தன் விலா எலும்பில் காயம்….!!!

Default Image
  • விங் கமாண்டர் அபிநந்தன் விலா எலும்பில் காயம்.
  • விமானத்தில் இருந்து அவர் வெளியே குதித்தபோது காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்திய விங் கமண்டரானஅபிநந்தன் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கையில் அகப்பட்டு, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியா திரும்பிய அபிநந்தன் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அபிநந்தனின் முதுகு எலும்பின் கீழ் பகுதியிலும் காயம் உள்ளது என மருத்துவமனையில் மேற்கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காயம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், விமானத்தில் இருந்து அவர் வெளியே குதித்தபோது காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பாராசூட்டில் இறங்கியபோது பாகிஸ்தானியர்கள் தாக்கியதில் விலாவில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்