வாய் துர்நாற்றம் அடிக்கிறதா! உடனே இதனை செய்யுங்கள்.
வாய்துர்நாற்றம் ஏற்படுவது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். அவ்வாறு ஏற்படும் வாய் துர்நாற்றம் வர காரணம் வயிற்று புண்,அல்சர் இருந்தால் கண்டிப்பாக ஏற்படும். அஜீரண கோளாறு இருந்தாலும் நாம் உண்ணும் உணவுசெரிக்காமல் உணவுக்குழாயில் இருந்துகொண்டு ஒருவித பாக்டிரியாவை உருவாக்கும்.அது வாய்க்கும் வயிற்றுக்கும் இடையில் வந்து வந்து சென்று ஒருவித புளிச்ச யாப்பத்தை உருவாக்கும். மேலும் சொத்தை பல் இருந்தால் அதில் சீல் வைத்து அதிலிருந்து துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த வாய்துர்நாற்றத்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.இதனை தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றை சரியான முறையில் செய்தால் வாய்துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
தவிர்க்க செய்யவேண்டியவை
எந்தவித செலவும் இல்லாமலே வாய்துர்நாற்றத்தை போக்கலாம். பாக்கு போடுதல்,ஏலக்காய் சாப்பிடுதல்,வாயில் ஸ்ப்ரே அடித்தல் போன்றவை மூலம் தவிர்க்கலாம்.ஆனால் இதெல்லாம் தற்காலிக தீர்வாக தான் இருக்கும்.
நிரந்தர தீர்வு காண மா இலையை வாயில் போட்டு மென்று சாறு குடித்தால் வை துர்நாற்றம் போகும்.
காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீர் குடியுங்கள் அதன் பின் 1 மணி நேரம் கழித்து காபீ டீ குடியுங்கள்.
எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து வாய் கொப்புளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் வாயில் நல்லென்ணையை வாயில் 10 நிமிடம் வைத்து வந்தால் வாயில் உள்ள சகல பிரச்சனைகளும் நீங்கும்.