வானில் தொடர்ந்து விண்கற்கள் எரிந்து விழும் அதிசய நிகழ்வு!அதிஷ்டசாலிகள் கண்டுகளிக்கலாம்!
இன்று உலகின் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த வானில் தொடர்ந்து விண்கற்கள் எரிந்து விழும் அதிசய நிகழ்வை மக்கள் கண்டுகளிக்கலாம். லைரா விண்மீன் கூட்டத்தில் இருந்து இந்த விண்கற்கள் விழும் என்பதால் இதற்கு லைரிட் என்று பெயர் சூட்டப்பட்டது.
மணிக்கு 20 விண்கற்கள் வரை பூமியை நோக்கி விழுவதை மக்களால் பார்க்க முடியும். தட்சர் என்ற வால் மீனானது சூரியனுக்கு மிக அருகில் நெருங்கும் போது, அதன் சிதைவுகள் புவியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். இந்தியாவில் இதை கவுகாத்தி மற்றும் அகமதாபாத்தில் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.