வானிலே விண்வெளி நிலையம்..சீனாவின் அசத்தல் முயற்சி…வைரலாகும் புகைப்படம்…!!
சீனா தான் உருவாக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் படங்களை வெளியிட்டு உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தினை அமைக்கும் நோக்கத்துடன் சொந்தமாக முதலாவது விண்வெளி நிலையத்தை சுமார் 20 வருடங்களாக சீனா உருவாக்கி வருகின்றது.எனினும் இதுவரை காலமும் இதன் வடிவம் இரகசியமாகவே வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது புகைப்படம் உட்பட மேலும் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது 55 அடிகள் நீளமானதாகவும், 60 டன் எடை கொண்டதாகவும் காணப்படுகின்றது. சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையமானது தற்போது உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தினை விட சிறியதாக இருக்கின்ற போதிலும், அமெரிக்காவிலுள்ள கால்பந்து மைதானங்களை விடவும் பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக இப் புதிய நிலையமானது சீனாவுக்கு சொந்தமாக இருக்கின்ற போதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானப் பணிகள் 2022 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
dinasuvadu.com