வாகன நிறுத்தம் அமைக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்…….!!
முசாபராபாத் பகுதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்கப்பட்டது
பாகிஸ்தான் நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் முசாபராபாத்தில் உள்ள ஆசாத் பல்கலைகழக மாணவர்கள், வாகன நிறுத்தம் அமைக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் ஒருகட்டத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சாலைகளில் அதிகளவில் திரண்ட மாணவர்கள், தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை கலைக்க, போலீசார் லத்திசார்ஜ் நடத்தினர். மேலும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர். இதனால், பல பகுதிகள் வன்முறை களங்களாக காட்சியளித்து பதட்டமான சூழல் நிலவுகின்றது.